Skip to main content

2013 Rasi Palangal; Guru Peyarchi for Kanni Rasi


இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 

கன்னி ராசிக்கு குருவானவர் 4வது மற்றும் 7வது வீட்டீற்கு அதிபதியானவர். குரு கன்னி ராசிக்கு கேந்திர அதிபதி தோஷம், மாரக அதிபதி தோஷம் மற்றும் பாதக அதிபதி தோஷம் உள்ளவர். ஆகவே குரு கன்னி ராசிக்கு கடுமையான பாபி ஆவார். குரு வலுவான பலம் இருந்தால் நல்லது இல்லை. பலம் இழந்த குரு கன்னி ராசிக்கு நல்லது. 

குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். கன்னி ராசி போலவே மிதுன ராசியும்  புதனுடைய வீடு ஆகும். புதன் குருவை சமமாக கருதுபவர். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார். மேலும் மிதுன ராசி கன்னி ராசிக்கு 10வது இடம் ஆகும். பலமற்ற குரு கன்னி ராசிக்கு பெரிய கெடுதலை செய்ய மாட்டார். அதே நேரம் 4வது மற்றும் 7வது வீட்டிற்கான பலனையும் சரிவர செய்யாமல் போய் விட வாய்ப்புண்டு. இது கன்னி ரசிகாரர்களுக்கு ஒரு இரண்டும் கெட்ட நிலையை உருவாக்கும். கன்னி ராசிகாரர்களுக்கு இது நல்ல நிலையா அல்லது கெட்ட நிலையா என்று குழம்ப செய்து விடும்.

கன்னி ராசிகாரர்களுக்கு குரு இருக்கும் இடம் முக்கியம். குரு துர் ஸ்தானத்தில் இருந்தால் கண்டத்திற்கு ஒப்பான பலனை நிச்சயம் தருவார். 10வது வீடு நல்ல இடமும் இல்லை அதே போல் கெட்ட இடமும் இல்லை. ஆகவே 2013 குரு பெயர்ச்சியில் கன்னி ராசிகாரர்களுக்கு  குரு கண்டிப்பாக கெடுதலான பலனை தர மாட்டார். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.

31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

வாகனம் மற்றும் சொத்து சம்பந்த பட்ட விஷயங்கள் சற்று தாமதித்து நிறைவேறும். பிரயாணங்கள் சற்று தள்ளி போக வாய்ப்பு உண்டு அல்லது தேவையான காரியங்கள் பிரயாணம் மூலம் நிறைவேற சற்று கடின உழைப்பு தேவை படலாம். கடின முயற்சிக்கு பின் சற்று ஒய்வு கிடைக்கும். தாயாரின் உறவில் உள்ள வேற்றுமையை களைய முயற்சிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் உள்ள கருத்து வேறுபாட்டை மாற்ற முயல்வீர்கள். 

08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் கன்னி  ராசி மற்றும் கன்னி  இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

வாகன மற்றும் சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்காது. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுவது நல்லது. அலைச்சல் அல்லது மன உளைச்சல் போன்றவற்றால் உடல் நலம் அல்லது மன நலம் சற்று பாதிக்கபடலாம். தாயாரின் உறவில் திருப்தி இருக்காது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. வாழ்க்கை துணையுடன் உள்ள வேறுபாடுகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் பிரயாணங்கள் மூலம் எதிர் பார்த்து செல்லும் காரியம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும்.

02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

தாயாரின் உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். வாகன மற்றும் சொத்து விஷயங்களில் இருந்து வரும் சில பிரச்சினைகள் நீங்குவதற்கு உண்டான காலம் இது. சற்று சுகமான நேரத்தை அனுபவிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள் தீரும். பிரயாணங்கள் எதிர் பார்த்த பலனை சற்று காலம் தாழ்த்தி தரும்.  

13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

மீண்டும் வாகனம் மற்றும் சொத்து விஷயங்கள் சற்று எதிர் மறையான பலனை தரலாம். பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது, ஏன் என்றல் எதிர் பார்த்த பலன் கிடைக்காது. தாயாரின் உறவில் சற்று நிதான போக்கினை கடை பிடிப்பது நல்லது. அதே போல் வாழ்க்கை துணையுடணும் சற்று அனுசரித்து போவது நல்லது. தொழில் செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் அனுசரித்து போவது நல்லது.. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நலம். 

30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

வாகனம், சொத்து, வாழ்க்கை துணை மற்றும் தாயாருடன் இருந்து வந்த மந்த அல்லது எதிர்மறையான சூழ்நிலை மாறி சிறிய முன்னேற்றம் ஏற்படும். சிறிது ஓய்வு எடுக்கும் சூழ்நிலையும் அமையும். பிரயாணங்கள் எதிர் பார்த்த பலனை தராது. வேலை செய்யும் இடங்களில் மற்றவர்கள் குறைகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. 

15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

வாகனம் மற்றும் சொத்து விஷயங்கள் சாதகமாக மாறும். பிரயாணங்கள் எதிர் பார்க்கும் பலனை சிறிது முயற்சிக்கு பின் நமக்கு கிடைக்க வழிவகுக்கும். தாயாருடன் இருந்து வரும் உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த வேறுபாட்டினை களைய நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி அளிக்கும். வேலை செய்யும் இடத்தில இணக்கமான சூழ்நிலை நிலவும். 

23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

நிதானமான போக்கை கடை பிடித்தால் வாழ்க்கை துணை மற்றும் தாயாருடன் சந்தோஷமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். வாகனம் மற்றும் சொத்து விஷயங்கள் சற்று தாமதமாக நடை பெற வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் நிதானத்துடன் செயல் படவும். பிரயாணங்களில் யோசித்து முடிவு எடுத்தால் நன்மை உண்டு. 

8.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.

கன்னி  ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 4வது வீட்டின்  கிரகம் அல்லது சுக்கிரன் திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் வாகனங்கள் மற்றும் பிரயாணங்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

5. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 4வது வீட்டின்  கிரகம் அல்லது செவ்வாய் அல்லது சுக்கிரன் திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் சொத்து சம்பந்த பட்ட விஷயங்கள்  மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.

6. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 4வது வீட்டின்  கிரகம் அல்லது சந்திரன்  திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் தாயார் சம்பந்த பட்ட விஷயங்கள்  மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்.

7. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 7வது வீட்டின்  கிரகம் அல்லது சுக்கிரன் திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் மனைவி சம்பந்த பட்ட விஷயங்கள்  மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்.

8. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 7வது வீட்டின்  கிரகம் அல்லது குரு திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் கணவன் சம்பந்த பட்ட விஷயங்கள்  மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்.

9. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 10வது வீட்டின்  கிரகம் அல்லது செவ்வாய்  திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் மோதல் போக்கை கடை பிடிக்காமல் இருப்பது நல்லது. 

10. கன்னி ராசியில் பிறந்தவர்கள் 4வது அல்லது 6வது வீட்டின்  கிரகம் திசை நடந்து, அக்கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.  

11. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.

12. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.

13. கன்னி ராசிகாரர்களுக்கு  குரு பெயர்ச்சி நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. கன்னி ராசியினர் விவேகம் அற்ற செயல், பேச்சு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சினையும், சொத்து மற்றும் வாகன சம்பந்த விசயத்திலும் மாட்டி கொண்டு நிம்மதியை இழக்க வேண்டி வரும். 

14. குருவின் பலமற்ற பார்வை 2வது, 4வது மற்றும் 6வது வீட்டில் விழுகின்றது.  எந்த நிலையிலும் உடல் நலம், குடும்ப நலம் மற்றும் பண விஷயங்கள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். 

15. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

2024 SEPTEMBER VIRGO ASTROLOGY PREDICTION

2024 September Virgo Financial Astrology 2024 September Kanni Rasipalan For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays or erratic progress can be expected during the entire month of September 2024. Work Efficiency: Mixed efficiency is likely from 1 st to 17 th September 2024. Good efficiency can be expected from 18 th to 30 th September 2024. Difficulties are possible from 16 th to 20 th September 2024. Dissatisfactions are possible from 27 th to 30 th September 2024. Income from Investments: Stable returns are possible from 1 st to 4 th ; and from 17 th to 30 th September 2024. Erratic returns are possible from 5 th to 16 th September 2024.   For Business Peoples: Sales & Marketing: Delayed progress & fluctuating stable sales can be expected during the entire month of September 2024. Productivity: Delays affecting the productivity is possible from 1 st to 17 th September 2024. Good & stable product...

EFFECTS OF MOON ON THE KANNI LAGNA AND 12 ZODIAC SIGNS

"EFFECTS OF THE MOON (CHANDRA) ON THE KANNI LAGNA (VIRGO RISING) IN THE 12 DIFFERENT ZODIAC SIGNS" The Moon has the lordship over the 11th house to the Kanni Lagna (Virgo Rising). The 11th house is a malefic house to the  Kanni Lagna (Virgo Rising), because it comes under the "Upa Lagna". The Moon maintain friendly ties with Budha (who owns the Kanni), but the Budha treats the Moon as its enemy. Thus it is an unequal relationship between the Budha and the Moon.  1. Kanni lagna and Kanni Rasi:  "Moon in the Lagna"- Highly skillful and efficient. Humorous in nature but very sensitive too. 2. Kanni Lagna and Thula Rasi: "Moon in the 2nd house" - Efficient and self serving in nature. Looks for Profits on every issues. 3.  Kanni Lagna and Viruchika Rasi: "Moon in the 3rd house" - Brilliant but depressed mindset and has unpredictable character too. 4.  Kanni Lagna and Dhanusu Rasi: "Moon in the 4th hous...

KANNI RASIPALAN 2024 AUGUST

2024 August Virgo Financial Astrology 2024 August Kanni Rasi Predictions For Salaried Peoples: Job searches, Job promotions & Project implementations: Delays or erratic progress can be expected during the entire month of August 2024. Work Efficiency: Mixed efficiency is likely from 1 st to 21 st August 2024. Good efficiency can be expected from 22 nd to 31 st August 2024. Income from Investments: Moderate &mildly erratic returns are possible from 1 st to 18 th August 2024. Moderate but stable returns are possible from 19 th to 31 st August 2024. For Business Peoples: Sales & Marketing: Delayed progress & fluctuating stable sales can be expected during the entire month of August 2024. Productivity: Delays affecting the productivity is possible from 1 st to 21 st August 2024. Good & stable productivity is possible from 22 nd to 31 st August 2024. Profits & Payment collections: Fluctuating profits & delays payment collections are li...